Skip to main content

பசிபிக் பெருங்கடலில் கப்பல் உடைந்து தத்தளித்த பெண் 2 நாட்களுக்கு பின் மீட்பு...

Published on 10/12/2018 | Edited on 10/12/2018

 

sus

 

கடல் வழியாக கப்பல் மூலம் உலகை சுற்றி வரும் போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்தை சேர்ந்த சூசி என்ற 29 வயது பெண்ணின் கப்பல் பனிப்பாறையில் மோதி சேதமடைந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக பசிபிக் பெருங்கடலின் மத்தியில் சிக்கி தத்தளித்துள்ளார். இந்நிலையில் அந்த வழியாக வந்த சரக்கு கப்பல் ஊழியர்கள் அவரை மீட்டு காப்பாற்றியுள்ளனர். 50 மணிநேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்ட அந்த பெண் கடல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கான முதலுதவி சிகிச்சைகளுக்கு பின்னர் அவர் கப்பல் மூலம் கரைக்கு கொண்டுவரப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்  

Next Story

கல்குவாரியில் விழுந்த தொழிலாளி சடலமாக மீட்பு

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
A worker who went to bathe in Calquary died

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அடுத்த பொன்னாச்சி பகுதியைச் சேர்ந்தவர் புட்டப்பா (50). இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பெஜிலட்டி பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் கல் சைனிங் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பருடன் அதேப்பகுதியில் உள்ள மற்றொரு கல்குவாரியில் குளிக்க சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி நீரில் மூழ்கினார். இது பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் உடனடியாக இது குறித்து கல்குவாரியில் உள்ள மேலாளர் இடம் தகவல் தெரிவித்தார். பர்கூர் போலீசாரும், அந்தியூர் தீயணைப்பு  வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் புட்டப்பாவை தேடினர். இரவு நேரம் என்பதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

நேற்று 2 -வது நாளாக தேடும் பணி நடந்தது. அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மாலை புட்டப்பா உடல் மீட்கப்பட்டது.இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.