Skip to main content

"எனது தோட்டத்திலிருந்து நகருங்கள்"- பேட்டியளித்த பிரதமரை பாதியில் தடுத்த நபர்... ஒரு சுவாரசிய சம்பவம்...

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

get off the grass autralian pm scott morrisons comical moment


ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் ஊடகங்களைச் சந்தித்தபோது, அவர்கள் நின்றுகொண்டிருந்த தோட்டத்தின் உரிமையாளர் அவர்களை நகர்ந்து செல்ல கூறியதை அடுத்து, அனைவரும் அங்கிருந்து நகர்ந்து சென்றபின்னர் அவர் தனது செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்தார். 
 


ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கூகாங் நகரத்திற்குச் சென்றபோது, அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாட்டின் பொருளாதார மீட்பு குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் நின்று பேசிக்கொண்டிருந்த புல்வெளியின் உரிமையாளர் தனது தோட்டத்தில் யாரோ நிற்பதைக கண்டு வெளியே வந்துள்ளார். பின்னர் தனது வீட்டு வாசலில் இருந்துகொண்டு, "அனைவரும் அங்கிருந்து நகர்ந்து செல்லுங்கள், அங்கு இப்போதுதான் புதிதாக சில விதைகளைப் பயிரிட்டுள்ளேன்" எனச் சொல்லியுள்ளார். இதனைக் கண்ட பிரதமர் மோரிஸன், அந்த நபரைக் கண்டு புன்னகைத்தபடி, அங்கிருந்து நகர்ந்து, செய்தியாளர்களையும் அங்கிருந்து நகரச்சொல்லி புல்வெளிக்கு வெளியே அனைவரும் வந்ததும் தனது பேட்டியைத் தொடர்ந்தார். குடிமகன் ஒருவரின் பேச்சைக் கேட்டு, எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் உடனடியாக அதன்படி நடந்த ஸ்காட் மோரிஸனின் இயல்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்