முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில் முன்னாள் அதிபர் ட்ரம்ப், தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாகப் புகார் கூறப்பட்டது. பின்பு இது தொடர்பாக ட்ரம்ப் உள்பட 19 பேர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜார்ஜியாவின் அட்லாண்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்தது. அதனால் 19 பேருக்கும் அட்லாண்டா நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும் இன்று (25 ஆம் தேதி) தாமாக முன்வந்து ஆஜராக 19 பேருக்கும் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜார்ஜியா சிறையில் சரணடைந்தார். அதைத் தொடர்ந்து ட்ரம்ப்பின் அடையாளங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு, 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டார்.