Skip to main content

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் கைது!

Published on 25/01/2025 | Edited on 25/01/2025
Former Sri Lankan President Rajapaksa's son arrested

இலங்கை முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சேவின் ஆட்சியின் போது, தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர போரில் கொத்து கொத்தாய் தமிழ் இனம் பலியாகியது. அந்தக் கண்ணீரும் கதறலும் எப்போதும் அழியாத வடு. இவருக்கு நமல், ரோஹித, யோஷித ராஜபக்ச ஆகிய மகன்கள் உள்ளனர். 

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சேவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்சவை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக சொத்துக்களை வாங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2006ஆம் ஆண்டு யோஷித மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதராங்கள் இருப்பதாக அட்டர்னி ஜெனரல் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அதன் அடிப்படையில், பெலியத்த என்ற பகுதியில் தங்கியிருந்த யோஷித ராஜபக்சவை குற்றப் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். 

சார்ந்த செய்திகள்