ஜப்பானின் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767 ரக விமானம் ஒன்று, இன்று காலை ஜப்பானின் புகுயோகா நகரில் இருந்து தலைநகர் நோக்கியோவிற்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 178 பயணிகளும் சில சிப்பந்திகளும் இருந்தனர். நடுவானில் விமானம் பயணித்துக்கொண்டிருந்த போது விமானத்தின் மேற்கு பகுதியில் உள்ள இன்ஜினில் இருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடந்த பைலட் அருகில் இருந்த விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதனால் ஆபத்தும் ஏற்படும் என்பதை உணர்ந்த பைலட் உடனடியாக விமானத்தை புகுயோகா விமான நிலையத்தில் தரையிறக்கினார். விமானியின் இந்த சாதுரியத்தால் 200க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். பயணிகள் அனைவரும் அவசர கதவின் வழியாக வெளியேற்றப்பட்டு, மாற்று விமானத்தில் பயணம் செய்தனர்.