Published on 13/10/2018 | Edited on 13/10/2018
உலகம் முழுக்க மொத்தம் 30 மில்லியன் நபர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று கடந்த மாதம் இறுதியில் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து மக்கள் எல்லாம் அச்சத்தில் ஆழ்ந்திருக்க, ஹாக் செய்யப்பட்ட கணக்குகளிலிருந்து யாருடைய தனிப்பட்ட விவரங்களையும் ஹாக்கர்கள் எடுக்கவில்லை என்று அறிவித்தது. மேலும் இதுதொடர்பாக போலீசில் புகார் செய்து விசாரணை நடந்துவருவதாக தெரிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது ஹாக் செய்யப்பட்ட கணக்குகளில் 14 மில்லியன் கணக்குகளின் தனிப்பட்ட விவரங்களான ஃபோன் நம்பர், கணக்கில் உள்ள நண்பர்கள் யார் போன்றவைகளை எல்லாம் ஹாக்கர்ஸ் திருடியுள்ளதாக அதிர்ச்சித்தகவலை அளித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.