Published on 01/02/2019 | Edited on 01/02/2019

ஃபேஸ்புக் நிறுவனம் இந்தோனேஷியாவில் போலியான செய்திகளை பரப்பிவந்த 207 ஃபேஸ்புக் பக்கங்கள், 800 ஃபேஸ்புக் கணக்குகள், 546 ஃபேஸ்புக் குழுக்கள் மற்றும் 208 இன்ஸ்டாகிராம் கணக்குகளை நீக்கியுள்ளது.
260 மில்லியன் மக்கள் தொகை கொண்ட, உலகின் நான்காவது பெரிய நாடான இந்தோனேஷியாவில் இந்த நடவடிக்கையை ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம், குறைந்தது 1,70,000 பேர் தற்போது தடை செய்யப்பட்டுள்ள ஃபேஸ்புக் பக்கங்களை பின் தொடர்ந்துள்ளனர். அதேபோல் 65,000-க்கும் மேற்பட்டோர் தற்போது தடை செய்யப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் கணக்கை பின் தொடர்ந்துள்ளனர். என்று தெரிவித்துள்ளது.