அமெரிக்க ராணுவத்தின் உள்ள கோனன் என்ற மோப்ப நாய்க்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
சிரியாவில் பதுங்கியிருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவன் அல் பாக்தாதியை கடந்த மாதம் அமெரிக்க படைகள் கண்டுபிடித்து சுற்றி வளைத்து கொன்றது. இதில் அல் பாக்தாதியின் மறைவிடத்தை கண்டுபிடிப்பதில் மோப்பநாயான கோனன் முக்கிய உதவியை புரிந்ததாக கூறப்பட்டது. அமெரிக்க ராணுவத்தால் சூழப்பட்டதால் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்து அல் பாக்தாதி உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த வெடிப்பு சம்பவத்தில் கோனன் காயமடைந்த நிலையில், டிரம்ப் அந்த நாய்க்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் ஒன்றையும் செய்தார். இந்த நிலையில் குண்டு வெடிப்பு காயங்களில் இருந்து தேறிய மோப்ப நாய் கோனனை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.