மொராக்கோ நாட்டின் மொரொக்கோவில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள மாரேஷ் என்ற பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 03.14 மணிக்கு கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 8.36 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் பழமையான கட்டடங்கள், குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதையடுத்து மொராக்கோவில் அடுத்தடுத்து 6 முறை சிறிய அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்பொழுது உயிரிழப்பு எண்ணிக்கை 2122 ஆக அதிகரித்துள்ளது.
1000க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மொராக்கோவிற்கு உதவ பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன.