Skip to main content

பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ பட்டம் பெற்ற நாய்

Published on 18/12/2018 | Edited on 18/12/2018

 

dog

 

அமெரிக்காவில் பிரிட்னி ஹாலே என்ற மாணவி வளர்க்கும் கிரிஃபின் என்கிற நாய்க்கு கிளார்க்ஸன் பல்கலைக்கழகம் கவுரவ டிப்ளமோ பட்டம் வழங்கியுள்ளது. நார்த் கரோலினாவில் உள்ள கிளார்க்ஸன் பல்கலைக்கழகத்தில் ஆக்குபேஷனல் தெரபி பிரிவில் பிரிட்னி ஹாலே முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவருக்கு முதுகுத்தண்டுவடப் பிரச்சினை இருப்பதால், அவரால் எழுந்து நடக்க இயலாது. எனவே, ‘கிரிஃபின்’ என்று பெயரிட்டு அவர் வளர்த்த நாய்க்கு பல்வேறு கட்டளைகளைக் சொல்லிக்கொடுத்து வளர்த்து வந்தார். அதன்படி காலை நேரத்தில் பிரிட்னியின் சக்கர நாற்காலியை தள்ளிச் செல்லுதல், வீட்டு வாயில் கதவைத் திறந்துவிடுதல், பிரிட்னியின் செல்போனை எடுத்து வருதல், புத்தகத்தை எடுத்து வருதல் என அனைத்து பணிகளையும் கிரிஃபின் செய்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி பல்கலைக்கழகத்துக்கு பிரிட்னி வரும்போது அவரைப் பாதுகாப்பாக அழைத்து வருதல், அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளையும் கிரிஃபின் செய்து வந்துள்ளது. இதனை பாராட்டும் வகையில் நியூயார்க்கில் உள்ள பாட்ஸ்டாம் அறக்கட்டளை சார்பில் கிரிஃபினுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப் பரிந்துரைத்தது. இதன்படி கடந்த சனிக்கிழமை கிளார்க்ஸன் பல்கலைகழகம் அந்த நாய்க்கு கவுரவப் பட்டம் வழங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்