Published on 14/08/2020 | Edited on 14/08/2020

அமெரிக்கத் துணை அதிபருக்கான போட்டிக்குக் கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 மணிநேரத்தில் ஜோ பிடென் போட்டியிடும் ஜனநாயக கட்சிக்கு ரூ.359 கோடி நிதி திரண்டுள்ளது..
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குத் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், கறுப்பின மற்றும் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் ஜனநாயக கட்சியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. அதேபோல இக்கட்சிக்கு வந்துகொண்டிருந்த நிதியின் அளவும் வெகுவாக உயர்ந்துள்ளது. அதன்படி, இந்த அறிவிப்பு வெளியான 48 மணிநேரத்தில் ஜனநாயக கட்சிக்கு ரூ.359 கோடி நிதி திரண்டுள்ளது.