Skip to main content

வெறும் கண்ணாடி மோதிரத்தால் ஜாக்பாட் அடித்த இலண்டன் பெண்...

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

 

 

dd

 

லண்டனை சேர்ந்த டெப்ரா காடார்ட் எனும் 55 வயதான பெண், லண்டனில் வசித்துவருகிறார். இவர் 33 வருடங்களுக்கு முன்பு, ஏலம் போன்ற விற்பனை மையத்தில் ஒரு கண்ணாடி மோதிரத்தை மிக குறைவான விலைக்கு வாங்கியுள்ளார். இது இந்திய மதிப்பில் வெறும் ரூ. 920 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோதிரத்தை சில முறை மட்டும் பயன்படுத்திவிட்டு அப்படியே வீட்டில் வைத்துள்ளார். தற்போது அவருக்கு பணத்தேவை ஏற்பட, தன்னிடம் உள்ள கல் மற்றும் கண்ணாடி மோதிரங்களை விற்கலாம் என்று யோசித்துள்ளார். அதன்பின் அந்த மோதிரத்தை நகைக்கடைக்கு கொண்டு சென்ற டெப்ராவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த மோதிரத்தை வாங்கிய நகைக்கடைக்காரர்கள் இந்த மோதிரம் வைரத்தால் ஆனது, இது இந்திய மதிப்பில் ரூ.6.8 கோடி என்றும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட டெர்பா இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். மேலும் அந்த வைர மோதிரத்தை ஏலமிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடியில் கருப்பு வைர மோசடி.. 27 லட்சத்தில் ஆரம்பித்த பேரம்...

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

Black diamond issue in Thoothukudi

 

தென்மாவட்டத்தில் துறைமுகம், ஷிப்பிங் கார்ப்பரேசன் மற்றும் பல தொழில்களைக் கொண்ட பணப்புழக்கமுள்ள நகரம் தூத்துக்குடி. செல்வச் செழிப்பைக் கொண்ட ஏரியா என்பதால் வியாபாரத்தில் ஏற்றமிருக்கும். அதே சமயம், சில திரைமறைவுக் கும்பல்களால் மோசடிகள் நடப்பதும் அவ்வப்போது அவர்கள் பிடிபடுவதும் நடந்துவருகிறது.

 

குறிப்பாக, கள்ளடாலர் மற்றும் பழைய நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றம் செய்தல் போன்றவைகள் கடந்த காலங்களில் பிடிபட்டும் இருக்கின்றன.

 

இதனிடையே நகரில் இரண்டு பேர் போலியான வைரங்களுடன் சுற்றி வருவதாகக் கிடைத்த தகவலையடுத்து மாவட்ட எஸ்.பியான ஜெயக்குமாரின் உத்தரவின்பேரில் வடபாகம் போலீசார் நேற்று முன்தினம் மாலை சோதனை செய்தனர். அப்போது, கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு பேரை மடக்கி சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து கருப்பு நிறத்தில் இரண்டு வைரக் கற்களைக் கைப்பற்றினர்.

 

அவர்களைப் போலீசார் விசாரித்தபோது, கர்நாடகாவின் பெங்களூர் பகுதியின் ஜே.பி.நகர் கொத்தனூர் தின்னே ஏரியாவைச் சோந்த அனந்தா (37) மற்றும் ஒசூரின் இந்திரா நகரைச் சோந்த வெங்கடேஷ்பாபு (45) என்பதும் தெரியவந்திருக்கிறது.

 

அனந்தாவின் ஒசூர் மாமனார் அங்கு ஜோதிடராக இருப்பவர். அவர் கொடுத்த அதிர்ஷ்ட ராசிக்கல்லான கறுப்பு வைரக் கற்களை விற்பதற்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த வைரக் கற்களை எடை போட்டதில் 427 கேரட் எடை என்பதை அறிந்து கொண்ட போலீசார் அவைகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

 

Black diamond issue in Thoothukudi

 

இதனிடையே தூத்துக்குடியில் தங்கிய இவர்கள், தங்களிடம் உள்ளது ராசியான வைரக் கற்கள். தேவை எனில் 27 லட்சம், இதுவே குறைந்த விலை என்று புரோக்கர்கள் மூலம் பேரம் பேசியதாகத் தெரிகிறது. மேலும் இந்த வகை கருப்பு ராசிக்கற்களை குறிப்பிட்ட ஒரு மதத்தினரே வாங்குவர் என்பதால் அவர்களிடம் பேரம்சியது தெரியவந்திருக்கிறது.

 

இதனிடையே வைரக் கற்களை ஆய்வுசெய்த மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார், “ஆய்வு செய்ததில் அது உண்மையானதல்ல எனத் தெரியவந்திருக்கிறது. அவர்கள் அதைக் கொண்டு வேறு எங்காவது மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்று விசாரிக்கப்படுகிறது. கருப்பு வைரத்தை யாரும் வாங்க மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் வாங்குவர் என்று அறிந்து தூத்துக்குடி வந்துள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

 

 

Next Story

வைரம் கிடைப்பதாக நிலத்தை தோண்டும் மக்கள்... ஆய்வு நடத்த நாகலாந்து அரசு முடிவு...

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

nagaland government to reasearch on mon for diamond

 

 

நாகாலாந்து மாநிலத்தின் ஒரு கிராமப்பகுதியில் நிலத்தில் வைரங்கள் கிடைப்பதாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரவிய நிலையில், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தின் வச்சிங் பகுதியைச் சேர்ந்த வாஞ்சிங் கிராமத்தில் நிலத்திலிருந்து வைரக்கற்கள் கிடைப்பதாக அண்மைக்காலமாகத் தகவல்கள் பரவி வந்தன. மேலும், வைரக்கற்கள் எடுப்பதுபோன்ற புகைப்படங்களும், இதற்காக மக்கள் நிலத்தைத் தோண்டும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வந்தன. மேலும், நிலத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் காட்டப்பட்ட சிறிய துண்டுகளாக மிளிரும் படிகக்கற்களின் படங்களும் இணையத்தில் பரவியது. இந்நிலையில், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 

நாகாலாந்தின் புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வச்சிங் பகுதியில் விலைமதிப்பற்ற தாதுக்கள் கண்டெடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய முதற்கட்டமாகக் குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்பிறகு புவியியலாளர்களான அபெந்துங் லோதா, லாங்க்ரிகாபா, கென்யெலோ ரெங்மா மற்றும் டேவிட் லூபெனி ஆகியோர் அடங்கிய குழு வாஞ்சிங் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டு விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.