இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோ-டெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த கோவாக்சின் தடுப்பூசியை ஒகுஜென் நிறுவனம் அமெரிக்காவில் தயாரித்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக ஒகுஜென் நிறுவனம், கோவக்சினுக்கு அவசர கால அனுமதி கோரி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்தது.
இருப்பினும் ஒகுஜென் நிறுவனம், கோவாக்சின் தடுப்பூசியை கொண்டு செய்யப்பட்ட ஆய்வக பரிசோதனையின் பகுதி தரவுகளை மட்டுமே கடந்த மார்ச் மாதம் சமர்பித்திருந்தது. இதனையடுத்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கோவாக்சினுக்கு அவசர கால அனுமதியை வழங்க மறுத்துள்ளது.
அதேநேரத்தில் கோவக்சினின் ஆய்வக பரிசோதனை தொடர்பாக கூடுதல் தரவுகளை தருமாறும், கோவக்சினுக்கு முழுமையான தடுப்பூசி உரிமத்திற்கு விண்ணப்பிக்குமாறும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்ஒகுஜென் நிறுவனத்தை அறிவுத்தியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், புதிய தடுப்பூசி விண்ணப்பங்களுக்கு இனி அவசரகால அனுமதி தரப் போவதில்லை என முடிவெடுத்தது. இதனையொட்டியே முழுமையான அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்குமாறு கோவக்சினுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.