Published on 14/09/2021 | Edited on 14/09/2021

கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சீராக குறைந்துவரும் நிலையில், சில நாடுகளில் மூன்றாவது அலை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியை துரித கதியில் செய்துவருகிறார்கள். இந்தியாவில் 70 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இருந்தும் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்தபாடில்லை.
உலகம் முழுவதும் தற்போதுவரை 22.60 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 20.26 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1.87 கோடி பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். 46.51 லட்சம் பேர் இதுவரை உலகம் முழுவதும் இந்த தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.