சீனாவில் வுஹான் நகரில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் அதன் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலையில், தற்பொழுது கரோவானால் உலக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,00,434 என்ற அளவிலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 6.58 லட்சம் என்ற அளவிலும், இறப்பு எண்ணிக்கை 1.7 லட்சம் என்ற அளவிலும் உள்ளது.
அதேபோல் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,985 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,260 என்ற அளவிற்கு உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 603 ஆக உள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,669 என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,379 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல் 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.