Skip to main content

பிறந்தது எலி புத்தாண்டு - உற்சாகம் இல்லாத சீனர்கள்!

Published on 25/01/2020 | Edited on 26/01/2020


சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 



இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 1080 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் தற்போது புத்தாண்டு பிறந்துள்ளது. சீனாவில் 15 மாதங்களுக்கு ஒருமுறை விலங்கின் பெயரில் புத்தாண்டு கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு எலியின் பெயரில் புத்தாண்டு கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் பீதியில் இருக்கும் அந்நாட்டில் இந்த ஆண்டு புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்படவில்லை. 
 

 

சார்ந்த செய்திகள்