சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கித் தீப்பிடித்த சம்பவம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் குன்மிங் என்ற இடத்தில் இருந்து குவாங்சூ மாகாணத்துக்கு 133 பயணிகளுடன் சென்ற ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் மலைப்பகுதியில் மோதி தீப்பிடித்து விழுந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. 133 பேரின் நிலை குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. என்ன காரணத்துக்காக விமானம் விபத்துக்குள்ளானது என்று அந்நாட்டு விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இன்ஜின் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்ற தகவலும் அதிகாரிகளின் மட்டத்தில் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் இறப்பு குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், விபத்தில் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்று கூறப்படுகிறது.