Published on 10/01/2019 | Edited on 10/01/2019

உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பிஸோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இனி வரும் நாட்களை சமூக பணிகளுக்குச் செலவிட இருக்கிறேன், 25 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர் நாங்கள் பிரியும் முடிவை எடுத்துள்ளோம் என கூறியுள்ளார். இதனை தற்போது இருவரும் கூட்டாக அறிவித்திருக்கிறோம் எனவும் ஜெஃப் பிஸோஸ் கூறியுள்ளார்.