கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் சீனாவின் பிற பகுதிகளிலும் கரோனா வைரஸ் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் சீனாவில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
இந்நிலையில் ஹூபே மாகாணத்தில் நேற்று மேலும் 100 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1765 ஆக உயர்ந்துள்ளது.
தினசரி பலரும் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் பணிபுரியும் நர்ஸ் பலரும் தங்கள் முடிகளை வெட்டி மொட்டை அடித்துக்கொண்டுள்ளனர். தலைமுடியினால் கரோனோ எளிதாக பரவுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
உலகம் முழுவதும் மொத்தம் 70,400 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.