Skip to main content

காணாமல் போய் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பூனை!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரை சேர்ந்த விக்டர் உசோவ், பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். சாஷா என பெயரிடப்பட்ட அந்த பூனை மீது அதிக கடந்த அன்பு வைத்திருந்தார் விக்டர். இந்த நிலையில், கடந்த 2014 -ஆம் ஆண்டு வீட்டில் இருந்த சாஷா திடீரென காணாமல் போனது. இதனால் சோகத்துக்கு ஆளான விக்டர் போலீசில் புகார் அளித்து தனது பூனையை தேடினார். ஆனாலும் சாஷா கிடைக்கவில்லை.
 

k



இந்த நிலையில், தொலைந்து போய் 5 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 2 ஆயிரம் கி.மீ., தொலைவுக்கு அப்பால் நியூ மெக்சிகோவின் சாண்டா பி நகரில் சாஷா இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. பூனையின் உடலில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோசிப்பை ஸ்கேன் செய்ததன் மூலம் விக்டரின் வசிப்பிடத்தை அறிந்த வன விலங்குகள் காப்பகம், அவரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தது. அதனை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு அந்த பூனை விமானம் மூலம் சாண்டா பி நகரில் இருந்து போர்ட்லேண்டுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. 

சார்ந்த செய்திகள்