Skip to main content

"ரத்தாகும் ஹாரி - மேகன் தம்பதியின் பாதுகாப்பு"... கனடா அறிவிப்பு...

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

ஹாரி மற்றும் மேகன் தம்பதிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு வரும் வாரங்களில் திரும்ப பெறப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது. 

 

canada to withdraw the security to megahan harry

 

 

இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் தம்பதி அண்மையில் அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு சர்வதேச அளவில் அரசியல்வாதிகள் மட்டும் பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் ஆகியோரின் இந்த முடிவால் அரச குடும்பம் கவலையடைந்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிக்கையும் வெளியிட்டது.

இருப்பினும் அவர்களது முடிவுக்கு மதிப்பளித்து, அரச குடும்பத்திலிருந்து விலகி சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள ஒப்புக்கொண்டது. தங்களது நேரத்தை வடஅமெரிக்கா மற்றும் கனடாவில் பிரித்து செலவிட போவதாக இந்த தம்பதி அறிவித்த நிலையில், தற்போது இருவரும் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசித்து வரும் இவர்கள் இருவருக்கும் கனடா அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில் வரும் மார்ச் 31 ஆம் தேதியோடு ஹாரி, மேகன் இருவரும் அரசு குடும்பத்திலிருந்து முழுதும் விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்பின் அவர்களுக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்படும் என கனடா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்