Published on 26/02/2020 | Edited on 26/02/2020

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தியிருக்கிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் ஜப்பானையும் விட்டுவைக்கவில்லை. இதனால் ஜப்பானில் வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
வரும் மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிட்டால் ஜப்பானில் திட்டமிட்டபடி ஜூலை 24ல் தொடங்கும் என்று தகவல். ஆனால், டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இடத்திற்கு மாற்றவோ, ஒத்திவைக்கவோ திட்டமில்லை எனவும் ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.