
கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவிடும் வகையில், அவசர கால தொலைபேசி உதவி எண்ணை அங்குள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசிக் கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கனடா நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுவடைந்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக அந்நாட்டு தலைநகரில் அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனடாவில் நிலவும் தற்போதையச் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் கவனமுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடக்கும் இடங்களைத் தவிர்க்கவும், ஊரடங்குகளைப் பின்பற்றவும், ஊடகங்கள் மூலம் கனடாவில் நிலவும் சூழல்களை அறிந்துக் கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவசர உதவி தேவைப்படுவோர் +1 6137443751 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். https://madad.gov.in/AppConsular/welcomeLink என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.