Published on 21/12/2019 | Edited on 22/12/2019
சுற்றுலாவுக்கு பெயர்போன கவுதமாலா நாட்டின் வடகிழக்கு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. இன்று காலை பீட்டன் பகுதியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கவுலன் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்துன் பின்புறம் லாரி ஒன்று மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் 20 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பலியானவர்களில் 6க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். லாரி அதிவேகமாக பேருந்தை கடக்க முயன்றதே விபத்துக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.