கால்பந்து போட்டியில் வெடித்த வன்முறையில் 174 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தோனேஷியாவில் நிகழ்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் மல்லாங்ரீ ஜென்சியில் உள்ள ஸ்டேடியம் ஒன்றில் நேற்று இரவு அரைமா எஃப்சி, பெர்ஸ்பியா, சுர்பியா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோல்வியடைந்த அணி தரப்பின் ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் இறங்கி கல் வீசி தாக்குதலில் ஈடுபட துவங்கினர். இதனால் எதிர் தரப்பினரும் தாக்கத் தொடங்கினார். இந்த தாக்குதல் சம்பவத்தில் 34 பேர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர். இதனால் கால்பந்து ஆட்டங்கள் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது வரை இந்த சம்பவத்தில் 174 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.