உலகின் மிகப்பெரிய வானவெடி பட்டாசு அமெரிக்காவில் வெடிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவில் ஏழு வருடங்களாக தயாரிக்கப்பட்ட வானவெடி பட்டாசுகள் தற்போது வெடிக்க செய்யப்பட்டுள்ளது. சுமார் 1270 கிலோ வெடிமருந்துகளுடன் தயாரிக்கப்பட்ட இந்த பட்டாசு சுமார் 671 மீட்டர் தூரம் வரை விண்ணில் சென்று வெடித்தது. இந்த பட்டாசு வெடிப்பு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடப்பெற்றுள்ளது.

இதனை அந்த மாகாண மக்கள் நேரடியாக பார்த்து மகிழந்தனர். மேலும் அதனை வீடியோ எடுத்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். இதற்கு முன்பு கடந்த 2016ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாட்டில் சுமார் 1100 கிலோ எடை கொண்ட வானவெடி பட்டாசு வெடிக்கப்பட்டதே உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. அந்த சாதனையை தற்போது முறியடிக்கப்பட்டது.