Skip to main content

அதிகப்படியான வெப்பம்... ஊருக்குள் புகுந்த பனிக்கரடிகள்!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

ரஷிய நாட்டின் கேப் ஸ்மிட் என்ற இடத்தில் ஏராளமாக பனிக்கரடிகள் வசித்து வருகின்றன. இங்கு தற்போது அதிகப்படியான வெப்ப நிலை நிலவுவதால் பனி உறைந்து போவதால், பனிக்கரடிகள் பக்கத்தில் உள்ள ரிர்காபி கிராமத்துக்கு உணவு தேடி அவ்வப்போது வந்து விடுகின்றன. இந்நிலையில் இன்று ஒரே நேரத்தில் 56 பனிக்கரடிகள் அந்த கிராமத்துக்குள் புகுந்தது. இந்த பனிக்கரடிகள் தாக்கும் அச்சம் இருப்பதால் பொதுமக்களிடையே பதற்றம் நிலவுகிறது. அங்கு நடக்கவிருந்த பொதுநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. 



பருவ நிலை பனிக்கரடிகளுக்கு சாதகமாக இருக்கிறபோது, குறிப்பாக உறைபனி நிலவுகிறபோது அவை கடல் முயல்களை வேட்டையாட சென்று விடும். ஆனால் வெப்பமயமாதல் காரணமாக அங்கு நல்ல வெப்பம் நிலவுவதுதான் பனிக்கரடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உணவு தேடி ஊருக்குள் வர வைக்கிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

சார்ந்த செய்திகள்