Published on 25/08/2018 | Edited on 25/08/2018

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 20வது சர்வதேச கடல் உணவு மற்றும் கண்காட்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இதன்பின்னர் அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்தார். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஜப்பான் தொழிலதிபர்களிடம் எடுத்துரைத்தார். சென்னையில் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்து கலந்துக்கொள்ளுமாறு அவர்களுக்கு அமைச்சர் ஜெயகுமார் அழைப்பு விடுத்தார்.