Skip to main content

சரிவை ஈடுகட்ட வேறு வழி இல்லை... ஊபர் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு...

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

uber layoff plans

 

கரோனா ஏற்படுத்தியுள்ள சரிவை ஈடுகட்டும் நடவடிக்கையாக சுமார் 5,400 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய ஊபர் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், சிறு நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்து துறைகளைச் சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களும் இறங்குமுகத்தில் காணப்படுகின்றன. இந்த எதிர்ப்பாரா நிதி நெருக்கடி நிலையைச் சமாளிக்க நிறைய நிறுவனங்கள் சம்பள குறைப்பு மற்றும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 5,400 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய ஊபர் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைக் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என ஊபர் தலைமைத் தொழில்நுட்பத் தலைவர் துவான் ஃபேம் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் உள்ள 27 ஆயிரம் நிரந்தர ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனத்தில் சுமார் 5,400 பேர் அடுத்தடுத்து வேலை இழக்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் ஊபர் நிறுவனம் சுமார் 1,100 பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

சார்ந்த செய்திகள்