அமெரிக்கா ஈரான் மீது வைத்த தடையை அடுத்து, உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலையின் பல மடங்கு உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்கா, ஈரன் மீது போடப்பட்ட தடையால், அமெரிக்காவின் நட்பு நாடுகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால் எங்களின் நட்பு நாடுகளை காயப்படுத்தவில்லை என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறுகையில், ”ஈரானுக்கு அமெரிக்கா போட்ட தடை, ஈரானின் கச்சா எண்ணெயின் ஏற்றுமதியை பாதிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். மேலும் அந்த நாட்டின் மீது தடைகளை விதித்து கூடுதல் நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். இதன் மூலம் எங்களின் நட்பு நாடுகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட வேண்டும் என்று விரும்பியதில்லை” என்றார்.