Skip to main content

தந்தை குறித்து அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் நெகிழ்ச்சி!

Published on 18/05/2019 | Edited on 18/05/2019


உலகின் நம்பர் 1 பணக்காரரும்,  அமேசான் ஆன்லைன் வணிக நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பெசோஸின் தந்தை மைக் பெசோஸ், 16 வயதில் அமெரிக்காவுக்குத் தன்னந்தனியாக வந்துள்ளார். இது குறித்து ஜெஃப் ஒரு வீடியோவை உருவாக்கி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கியூபாவில் பிறந்த மைக் பெசோஸ், 1962 ஆம் ஆண்டு தன் எதிர்காலத்துக்காக அமெரிக்காவின் மியாமி மாகாணத்துக்கு வந்துள்ளார். ஸ்பானிஷ் மட்டுமே அவர் பேசினார். அப்போது அவருக்கு கொஞ்சம் கொஞ்சம்தான் ஆங்கிலம் தெரிந்திருந்ததாம். ஆனால் தன், 'அமெரிக்க கனவை 'வாழ்வதற்கு ஆங்கிலம் மைக்கிற்குத் தடையாக இருந்திருக்கவில்லை. தன் தந்தையின் வாழ்க்கையை கொண்டாடும் வகையில் ஜெஃப் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

 

 

 

JEFF FAMILY

 

 

அவருடைய விடாப்படியான குணம், நம்பிக்கை முன் உதாரணமாக திகழ்கிறது. என் தந்தையின் அமெரிக்கப் பயணம் என்பது, எப்படி மக்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. அவரை கொண்டாட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. என் தந்தையின் தாய், அமெரிக்காவில் அதிகம் குளிரும் என்று நினைத்துள்ளார். இதற்காக அவருக்கு, துடைக்க பயன்படுத்தும் துணிகளில் இருந்து கோட் போன்ற ஒன்றை தயார் செய்துள்ளார். அந்த ஆடையை இன்னும் நாங்கள் பத்திரமாக வைத்துள்ளோம். தனது தந்தை அமெரிக்காவிற்கு வரும் போது 3 சர்ட்கள், 3 பேண்ட்கள், 3 அண்டர்-வேர்கள் மற்றும் ஒரு ஜோடி ஷூ உடன்  தன்னந்தனியாக  வந்ததை நினைத்துப் பார்த்தாலே திகிலாக இருக்கிறது என ஜெஃப் நினைவுக் கூர்ந்தார். ஆனால் ஃபிடல் காஸ்ட்ரோவிடம் இருந்து அவரை காப்பாற்ற அமெரிக்கா அனுப்புவதுதான் சரியானது என்று அவரது பெற்றோர்கள் நினைத்திருக்கிறார்கள் என்று நெகிழ்ந்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்