Published on 26/09/2020 | Edited on 26/09/2020
இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கடந்த சில வருடங்களாகவே விமானத்தில் செல்ஃபோன் சேவை துவங்குவதற்கான பணிகளை செய்துவந்தது. அதன்படி தற்போது சர்வதேச விமானங்களில் ஜியோ நெட்வர்க் மூலம் ஃபோன் கால், இண்டர்நெட் பயன்பாடு, எஸ்.எம்.எஸ் ஆகிய சேவைகளை பெறலாம் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச விமானங்கள் 20 ஆயிரம் அடி உயரத்தை தாண்டியதும் வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளை பயன்படுத்தலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சேவைகளை பயன்படுத்த ஜியோ போஸ்ட் பேய்டு வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டுமென்றும், இதற்கு ஒரு நாளைக்கு ரூ.499 கட்டணம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த ரூ.499 திட்டத்தில் 100 நிமிட ஃபோன் கால், 250 எம்.பி வேகத்தில் இண்டர்நெட், 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை இருக்கும்.