ஸ்பெயின் நாட்டின் மல்லோர்காவிலிருந்து ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவுக்கு தனது அப்பாவுடன் ஆறு வயது சிறுமி விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது சிறுமிக்கு காபி வழங்கப்பட்டுள்ளது. அச்சமயத்தில் எதிர்பாராத விதமாக காபி சிறுமியின் தொடையில் கொட்டியதில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவமானது கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.
![coffee](http://image.nakkheeran.in/cdn/farfuture/aGYlhkhL6JGWnie70dqhL-5ohfKTdsDNwp0DIze7Yf0/1576833714/sites/default/files/inline-images/coffee_3.jpg)
இதையடுத்து சிறுமியின் தரப்பில் ஐரோப்பா ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. நிகி என்ற ஆஸ்திரியாவை விமான நிறவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில், நிறுவனம் தரப்பில் பொறுப்பேற்க முடியாது என்று வாதிடப்பட்டது. விமான அதிர்வினால் கூட காபி சிறுமியின் தொடையில் கொட்டியிருக்கலாம் என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இறுதியில், பயணிகளுக்கு சேவை செய்யும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பும் விமான நிறுவனத்தினுடையது தான் என்று நீதிமன்றம் கூறியது. மேலும், நிறுவனம் அந்த சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.