Skip to main content

பனிச்சரிவில் சிக்கி 30 வருடங்களுக்கு பிறகு மெழுகு சிலைபோல் கிடைத்த இளம்பெண்....(வீடியோ)

Published on 01/09/2018 | Edited on 01/09/2018

 

ice

 

 

 

30 வருடங்களுக்கு முன் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண்  30 வருடங்களுக்கு பிறகு பனிக்கட்டிகளுக்கு நடுவில் அமர்ந்தபடி மெழுகு சிலைபோல கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

 

ரஷ்யாவில் 1987-ஆம் ஆண்டு எலினா பேஸிகினா என்ற இளம் பெண் தனது ஆறு நண்பர்களுடன்  ரஷ்யாவின் உயரிய பனிமலைகளில் ஒன்றான எல்பிரஸ் மலைப்பகுதிக்கு மலை ஏற்றம் சென்றுள்ளார். ஏற்கனவே அவர் ரஷ்யாவின் தொழிநுட்பத்துறையில் பணியாற்றிவந்தார். இப்படி கூட்டாக மலையேற்றம் சென்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஆறு நண்பர்கள் உட்பட எலினாவும் சிக்கிக்கொண்டார். ஆனால் அந்த இடரிலிருந்து தப்பித்த மற்ற ஆறு நண்பர்களும் எலினாவை மீட்க  பலமுயற்சிகள் எடுத்தும் எலினாவை கண்டுபிடிக்கமுடியாமல் வீடு திரும்பினர். பின்னர் மீட்பு வீரர்களைக்கொண்டு நடைபெற்ற தேடும் பணிகளிலும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்படியே நாட்கள் ஓட 30 வருடங்கள் ஓடிப்போனது. எலினா வீட்டார் கண்டிப்பாக இவ்வளவு முயற்சி எடுத்தும் அவள் சடலம் கூட  கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக அவள் எங்கவாது தப்பித்து சென்றிருப்பாள் அல்லது அவளை யாராவது கடத்தி இருக்கலாம் என நினைத்து வைத்துள்ளனர்.

 

ஆனால் தற்போது அங்கு சுற்றுலா சென்ற சுற்றுலா குழுவினர் 4,000 மீட்டர் தூரத்தில் ஒரு உடல் மெழுகு சிலைபோல் உறைந்த நிலையில் இருப்பதை அறிந்து அந்த உடல் 30 வருடங்களுக்கு முன் காணாமல் போன எலினா என உறுதிசெய்துள்ளனர். அந்த இடரில் சிக்கிய நேரத்தில் எலினா உடுத்தி இருந்த அதே உடையுடன் அமர்ந்தபடி மெழுகு சிலைபோல கிடைத்துள்ளார். அதுதொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.  

சார்ந்த செய்திகள்

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.