84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி 100 வயதைக் கடந்த முதியவர் ஒருவர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.
ஆண்டுக்கணக்கில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது என்பது எட்டாக்கனியாக உள்ளது. அதிலும் தனியார் துறைகளில் நீண்ட வருடங்கள் பணியில் இருப்பதென்பது நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் பிரேசிலில் 100 வயதை தொட்ட முதியவர் ஒருவர் அவருடைய வாழ்நாளில் 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி சாதனை படைத்துள்ளார். இதற்காக அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
பிரேசிலின் புரூஸ்க்யூ நகரிலுள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடைமட்ட ஊழியராக தனது பணியைத் தொடங்கி வால்டர் ஆர்த்மன் படிப்படியாக அந்த நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்று விற்பனை மேலாளர் என்ற இடத்தை அடைந்தார். 100 வயதிலும் அதே உற்சாகத்துடன் அவர் பணியாற்றி வருகிறார். பணியை உற்சாகமாக ஈடுபாட்டுடன் செய்தால் ஒரே நிறுவனத்தில் நீடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார் வால்டர்.