மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படுவதால் அடித்துபிடித்து நகரை விட்டு வெளியேறிய மக்களால் 700 கிலோமீட்டர் நீளத்திற்கு பாரிஸ் நகரில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.
பிரான்சில், அதிகரித்து வரும் கரோனா நோய்த்தொற்று அந்நாட்டின் சுகாதார அமைப்பை சிதைக்கும் என்று அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை தொடங்கி மேலும் நான்கு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அன்மையில் பிரான்ஸ் அரசு அறிவித்தது. அதன்படி, நள்ளிரவு முதல் ஊரடங்கு தொடங்குவதால், அதற்கு முன்பே பாரிஸ் நகரை விட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு வெளியேறிவிட வேண்டும் என அங்கு குடியிருக்கும் மக்கள் அடித்துபிடித்து நேற்று மாலை தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துள்ளனர். இதனால் பாரிஸ் நகரிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் சாலையில் சுமார் 700 கிலோமீட்டர் நீள டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊருக்கு செல்ல கிளம்பிய மக்கள் பல மணிநேரங்கள் சாலைகளில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், இதுவே அந்நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய டிராபிக் ஜாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.