Published on 26/06/2019 | Edited on 26/06/2019
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு 238 ரன்களை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.

நடைபெற்று வரும் உலககோப்பை போட்டியில் இன்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் நீஷம் 97 ரன்களையும், கிரான்ஹோம் 64 ரன்களும், கேன் வில்லியம்சன் 41 ரன்களையும் எடுத்தனர்.