Skip to main content

கிராமத்துக்குள் புகுந்து 134 பேரை துடிதுடிக்க கொடூரமாக கொன்ற வேட்டைக்காரர்கள்...

Published on 25/03/2019 | Edited on 26/03/2019

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், ஒரு கிராமத்தில் புகுந்த வேட்டைக்காரர்கள் அந்த கிராமத்தில் இருந்த அப்பாவி மக்கள் 130 பேரை கொடூரமான முறையில் கொன்று குவித்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

134 people killed by tribes in africas mali

 

மாலி நாட்டில் உள்ள தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. அவ்வப்போது தோகோன் வேட்டைக்காரர்கள் புலானி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி அவர்களை கொன்று, அவர்களிடம் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அதே போல நேற்று முன்தினம் புலானி இன மக்கள் வாழும் கிராமத்திற்குள் புகுந்த வேட்டைக்காரர்கள் தங்கள் கண்ணில் பட்ட மக்கள் அனைவரையும் கொன்று குவித்துள்ளனர். தாங்கள் கையில் கொண்டுவந்த கத்தி, ஈட்டி போன்ற கூர்மையான ஆயுதங்களால் கண்ணில்பட்ட மக்கள் அனைவரையும் கொன்று குவித்துள்ளனர். இதில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 55 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களை கொன்ற தோகோன் வேட்டைக்காரர்கள் அங்கிருந்த பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர்.

தொடர்ந்து ஒட்டுமொத்த கிராமத்தையும் சூறையாடிவிட்டு தோகோன் இனத்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்துக்குள் புகுந்து மக்களை கொன்று அந்த கிராமத்தையே சூறையாடிய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்