தாய்லாந்தில் குகையில் சிக்கியவர்களை ஒன்பது நாட்களக்கு பிறகு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தால் தாய்லாந்து மீட்பு குழுக்களுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.
தாய்லாந்தின் வட கிழக்கு பகுதியான தாம் லூவாங் என்ற மலை பகுதிக்கு கடந்த 23-ஆம் தேதி மலையேற்ற பயிற்சிக்கு சென்ற கால்பந்தாட்ட பயிற்சியாளர் மற்றும் கால்பந்தாட்ட வீர்கள் (சிறுவர்கள்) உட்பட 13 பேர் மலையேற்ற பயிற்சியின் போது ஒரு குகையில் ஒதுங்கியுள்ளனர். அப்போது அங்கு பெய்த கனமழையால் அவர்கள் குகையின் உள்ளே சிக்கிக்கொண்டு இறுதியில் காணாமல்போயினர்.
இவர்களை மீட்க தாய்லாந்து ராணுவம் மற்றும் மீப்பு படை உட்பட 1000 திற்கும் மேற்பட்டோர் குகையில் சிக்கி கொண்டவர்களை தேடும் பணியில் ஈட்பட்டிருந்தனர். ஆனால் இதுவரை குகையில் மயமான நபர்களை கண்டு பிடிக்கமுடியாத நிலையில் ஒன்பது நாட்களை கடந்து அவர்கள் இருந்த இடத்தை மிக சிரமப்பட்டு கண்டுபிடித்துள்ளனர்.
அப்போது பல சிரமங்களை கடந்து சில மீட்பு வீரர்கள் மட்டும் சிக்கிக்கொண்ட கால்பந்தாட்ட வீர்கள் இருந்த இடத்தை கண்டறிந்தனர். அந்த பகுதியை நோக்கி டார்ச் லைட் அடித்த மீட்பு பணியாளர் ஒருவர் எத்தனை பேர் உள்ளீர்கள் என கேட்டுள்ளார். அப்போது தாங்கள் 13 பேரும் பத்திரமாக உள்ளோம் என கூறியுள்ளனர். இதை கேட்டு சிரித்த அந்த மீட்பு பணியாளர் நீங்கள் மிகவும் திறமைசாலிகள் என கூறிவிட்டு திரும்பியுள்ளார். மேலும் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்ததை தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது மீட்பு குழு. இந்த செய்தியை அறிந்த குகையில் சிக்கிக்கொண்டவர்களின் உறவினர்கள் மீட்பு குழுவினரை பாராட்டி வருகின்றனர். மேலும் பலதரப்புகளில் இருந்து அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.