Published on 23/10/2022 | Edited on 23/10/2022
இதுவரை விடை தெரியாத கேள்விகளில் ஒன்று 'வேற்று கிரகவாசி' எனும் கூற்று உண்மையா என்பது. இது தொடர்பாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில் பறக்கும் தட்டுகளை கண்டதாகவும் அதிலிருந்து ஏலியன்கள் பூமிக்கு வந்ததாகவும் என பல்வேறு கதைகளை சிறுவயதிலிருந்தே நாம் அனைவரும் கேட்டிருக்க வாய்ப்புண்டு.
தற்பொழுது வரை இந்த மர்மங்களுக்கு விடைகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இதில் சீரியஸாக களம் இறங்க நினைத்துள்ளது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா. நாசா இது தொடர்பாக 16 விஞ்ஞானிகளை கொண்ட தனிக் குழுவை அமைத்துள்ளது. நூற்றாண்டுகளாக நிலவி வரும் இந்த வேற்று கிரகவாசிகள், பறக்கும் தட்டுகள் தொடர்பான கேள்விகளுக்கு 9 மாதங்களில் விடையளிக்கும் வகையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருவதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.