Skip to main content

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

kjl


தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பெரிய வணிக வளாகங்கள், கோயில்கள், கடற்கரைகள் முதலியவை நோய்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளி, கல்லூரிகளும் கடந்த சில நாட்களாக திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இதற்கிடையே திரையரங்குளில் 50 சதவீத பார்வையாளர்கள், பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. கரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மேலும் சில கட்டுப்பாடுகளை வழங்கக்கோரி அரசிடம் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசனை செய்த தமிழக அரசு இன்று மதியம் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மால்கள், வணிக வளாகங்கள், உணவகங்களில் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்