Published on 31/07/2018 | Edited on 31/07/2018
இன்று (செவ்வாய் கிழமை) செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகே வரும் அதிசய நிகழ்வு நடைபெறவுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துத்துள்ளனர். மனித உயிர்கள் வாழ ஏதுவான கிரகமாக செவ்வாய் கிரகம் இருக்க வாய்ப்புண்டு என பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் அண்மையில் இத்தாலிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ''மார்சிஸ்'' எனும் தொலைநோக்கியின் உதவியுடன் நடந்தப்பட்ட ஆய்வில் செவ்வாயில் உப்பு நீர் ஏரி இருப்பது கண்டுபிடிக்கபட்டது.
இந்நிலையில் இன்று செவ்வாய் கிரகமானது பூமிக்கு அருகில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் அதிசய இந்த நிகழ்வை மக்கள் பார்க்கமுடியும். பூமிக்கு அருகே செவ்வாய் வருவதால் அதன் நிறம் எப்போதும் இல்லாததை விட அதிக சிவப்பு வண்ணத்தில் தெரியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.