Skip to main content

பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மீது மர்ம நபர் தாக்குதல்!

Published on 03/11/2021 | Edited on 03/11/2021

 

பகர

 

பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

பெங்களூர் விமானநிலையத்தில் போலீஸ் பாதுகாப்போடு வெளியே சென்று கொண்டிருந்த நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் பின்னால் இருந்து தாக்கியுள்ளார். உடனடியாக அருகில் இருந்த சிஆர்பிஎப் காவலர்கள் தாக்குதல் நடத்தியவரை பிடித்தனர். நடிகர் விஜய் சேதுபதி தாக்குதல் நடத்திய நபரிடம் செல்ல முயல்வதும், அதற்குள் காவலர்கள் தாக்குதல் நடத்தியவரை அப்புறப்படுத்தியதும் தற்போது வெளியான வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

என்ன காரணத்திற்காக விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் சேதுபதி மீதான தாக்குதலுக்கு அவரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

 


 

 

சார்ந்த செய்திகள்