Skip to main content

கைதானதை செல்பி எடுத்த இளைஞர்கள்! - புகைப்படத்தை அழித்த பெண் அதிகாரியால் மறியல்!

Published on 05/04/2018 | Edited on 05/04/2018
tmmk 1


திருவண்ணாமலை நகரில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சி நடத்திய இரயில் மறியல் போராட்டத்தில் கலந்துக்கொண்ட தமுமுகவின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 50 பேர் இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது, சில இஸ்லாமிய இளைஞர்கள் மற்றவர்களை போல கைதாகி பேருந்தில் ஏற்றுவதை செல்பியும், போட்டோவும் எடுத்துள்ளனர்.

இதைப்பார்த்த ஏ.எஸ்.பி ரவாளிப்ரியா, நீங்கயென்ன பிக்னிக்கா போறிங்க போட்டோ எடுத்துக்கிட்டு இருக்கிங்க எனக்கேட்டபடியே ஒரு இளைஞரின் செல்போனை பிடுங்கிக்கொண்டுள்ளார். செல்போனை தாங்க மேடம் என அந்த இளைஞர் கேட்க முடியாது என்றவர் மத்தவங்கயெல்லாம் போ நீ மட்டும் நில் என ஒரு இஸ்லாமிய இளைஞரை நிறுத்திவைத்துள்ளார். இதைப்பார்த்த தமுமுகவினர் 10 பேர் ஏ.எஸ்.பியிடம், போட்டோ எடுத்துக்கறது தப்பா என கேள்வி கேட்டுள்ளனர்.

ஏ.எஸ்.பி செல்போனில் இருந்த புகைப்படங்களை அழித்துவிட்டு திரும்ப தந்துள்ளார். இது அதிகார மீறல். தப்பான புகைப்படம் எடுத்துயிருந்தால் அதை டெலிட் செய்யலாம் அதைவிட்டுவிட்டு சாதாரணமாக தங்களுக்குள் எடுத்துக்கொண்ட போட்டோவை ஒரு ஏ.எஸ்.பி வாங்கி அழிக்கலாம் எனக்கேட்டனர். அவர் பதில் சொல்லாமல் போய்விட ரயில் நிலையத்திலேயே காவல்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர் தமுமுகவினர்.

கோஷமிட்ட தமுமுகவினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அங்கு ஒன்றிணைந்த தமுமுகவினர் 20 பேர் காவல்துறையின் காவலையும் மீறி வெளியே வந்து திருவண்ணாமலை டூ கள்ளக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். போலிஸ் அதிகாரிகள் சென்று அவர்களை சமாதானம் செய்து சாலை மறியலை கைவிட கேட்டுக்கொண்டனர். அவரது அதிகார அத்துமீறல் செய்துள்ளார், அதற்கு மன்னிப்பு கேட்டால் மட்டும்மே சரியாக இருக்கும், அப்படி செய்தால் மட்டும்மே சாலை மறியலை கைவிடுவோம் என்றனர்.

அதன்பின் நடந்தவற்றை தமுமுக நிர்வாகி நாசரிடம் நாம் கேட்டபோது, ஏ.எஸ்.பி ரவாளிப்ரியா இன்னும் 3 தினங்களில் எஸ்.பியாக போகிறார். அதனால் பிரச்சனை செய்யாதீர்கள். சாலைமறியலை கைவிடுங்கள் என இன்ஸ்பெக்டர் கேட்டுக்கொண்டதால் சாலைமறியலை கைவிட்டு காவிரி ஆணைய பிரச்சனைக்காக கைதாகி மண்டபத்தில் உள்ளோம். அந்த பெண் அதிகாரி மீது எஸ்.பியிடம் புகார் தருவதற்கான வேலையில் வெளியே எங்கள் கட்சி தோழர்கள் ஈடுப்பட்டுள்ளார்கள் என்றார்.

செல்போன் கேமரா வந்தபிறகு தூக்கறது, குளிக்கறது, விளையாடுவது என அனைத்தையும் செல்பியாக எடுத்து முகநூலில் பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் அனைத்து தரப்பினரும். அப்படித்தான் போராட்டம் நடத்திவிட்டு கைதாகி சிறைக்கு செல்வதை போட்டோ எடுத்ததை தன் அதிகாரத்தை கொண்டு தடுப்பது சரியா ?.

tmmk 2

 

சார்ந்த செய்திகள்