Published on 14/10/2019 | Edited on 14/10/2019
குற்றப்பிரிவு ஏடிஜிபி இருந்த ஆபாஷ்குமாரை தற்போது சிறைத்துறைக்கு மாற்றப்பட்டத்தை தொடர்ந்து, இன்று சென்னை புழல் சிறையை ஆய்வு செய்தார்.
மூன்று ஆண்டுக்கு ஒரு முறை செய்யப்படும் சிறைத்துறை ஆய்வை, ஏடிஜிபி ஆபாஷ்குமார் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வு காலையில் தொடங்கப்பட்டு மாலை 04.00 மணிக்கு ஆய்வு முடிக்கப்பட்டது.
இந்த ஆய்வில் சிறையிலுள்ள வரவு செலவு ,கட்டுமான போன்ற ஆணவங்களை சரிபார்த்ததோடு, சிறைச்சாலைகளில் தண்டனை பெற்று வரும் கைதிகளுக்கு கைப்பேசி புழக்கம், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் போன்ற சொகுசு வாழக்கை உள்ளனவா? என்றும் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு சிறையிலுள்ள கைதிகளிடம் சந்தித்து சில கருத்துகளோடு, எச்சரிக்கையும் விடுத்துள்ளார். புழல் சிறையில் முன்பு செய்த சிறைத்துறை ஊழல் தற்போது தடுக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.