Skip to main content

”போவோம்.. இல்ல, பாய விரிச்சுப் போட்டு மல்லாக்கப் படுப்போம்” - போதை ஆசாமியின் அலப்பறை

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

young man was found lying in the rain intoxicated video goes viral

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கியுள்ளது. இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனையொட்டி சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

 

பொதுவாக மது அருந்திவிட்டு போதை ஆசாமிகள் சாலையில் செய்யும் சாகசங்களை நேரிலும் சமூக வலைதள வீடியோக்களிலும் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் தற்போது ஒருவர் மது போதையில் கொட்டும் மழையில் அலப்பறை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

சென்னை புளியந்தோப்பு பகுதியில் நேற்று இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்கு உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. அதில் மது அருந்திவிட்டு போதை ஆசாமி ஒருவர் படுத்து உருண்டு பாட்டுப் பாடி அலப்பறை செய்திருக்கிறார். இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்