Skip to main content

'அட்மினிடம் கேட்டு சொல்வார் திருமா; மாநாடு நடக்கவே கூடாது என்பதற்காகத்தான் நிபந்தனை'-ஆர்.பி.உதயகுமார்

Published on 15/09/2024 | Edited on 15/09/2024
nn

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

''விசிகவின் திருமாவளவன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவை நீக்கியதற்கு விளக்கம் சொல்லி இருக்கிறார். அந்த வீடியோவை போட்டதும் அட்மின் தான்; நீக்கியதும் அட்மின் தான் என அதற்குரிய விளக்கத்தை அவரே சொல்லி இருக்கிறார். ஏன் எடுத்தார் என்பதற்கான விளக்கத்தை அட்மினிடம் கேட்டு சொல்கிறேன் என அவரே சொன்னதாக செய்திகள் பார்க்கிறோம். அது ஒவ்வொருவருடைய உரிமை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உரிமை இருக்கிறது. கட்சியை நடத்துவதே ஆட்சியிலும் அதிகாரத்திலும் இடம்பெற வேண்டும் என்பதற்காகத்தான். எதார்த்த நிலவரங்கள்; கள நிலவரங்கள்; மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது; மக்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது.

கூட்டணி என்பதையே அறிஞர் அண்ணா தான் உருவாக்கியிருந்தார். பிரிந்து கிடக்கின்ற சக்திகள் மக்கள் சேவைக்கு பயன்படாமல் போய்விடக் கூடாது என்பதற்காக அன்றைக்கு அண்ணா மெகா கூட்டணி உருவாக்கி, இந்தியாவிலேயே மாநில கட்சியினுடைய தலைமையில் ஆட்சி பொறுப்புக்கு வர முடியும் என்ற நிலையை உருவாக்கினார். அதற்கு முன்பு வரை தேசிய கட்சி தான் மத்தியில் ஆட்சியில் இருப்பார்கள் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பார்கள். அண்ணாவிற்கு வருகைக்குப் பிறகுதான் அவருடைய முயற்சியினால் தான் தமிழ் சமுதாயத்திற்கு ஒரு விழிப்புணர்வைக் கொடுத்து, ஒரு கூட்டு முயற்சியில் மாநிலக் கட்சி தலைமையில் ஆட்சி அதிகாரம் மக்கள் சேவைக்கு இந்த மக்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.

அதில் இருந்து தான் கூட்டணி என்றது வந்துள்ளது. எனவே ஒவ்வொருவருக்கும் அவருடைய கருத்தை சொல்வதற்குக் கருத்து சுதந்திரம் உள்ளது. உரிமை இருக்கிறது. அன்னபூர்ணா விவகாரம் குறித்து மூத்த அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். ஆய்வுக் கூட்டத்தில் தங்களுடைய கருத்துக்களை சொல்கிறார்கள். அதுகுறித்து விளக்கம் சொல்ல வேண்டும். பதில் முறையாக இருக்க வேண்டும் என்பது எல்லாருடைய எதிர்பார்ப்பு.

பொதுவாகவே ஒரு புதிய கட்சி வருகின்ற பொழுது அந்தக் கட்சி சார்பாக தன்னுடைய பலத்தை நிரூபிப்பதற்கு மாநாடு நடத்துவது என்பது ஒரு மரபான விஷயம். அதற்கு இவ்வளவு நிபந்தனைகள் கொடுப்பது என்பது இதுவரை நாம் கேள்விப்படாத ஒன்று. பொதுவாக நிபந்தனைகள் விதிப்பார்கள். பாதுகாப்பு என்பது அரசினுடைய பொறுப்பு. காவல்துறையுடைய பொறுப்பு. அதனால் நிபந்தனைகள் கொடுப்பார்கள். ஆனால் மாநாடு நடக்கவே கூடாது என்பதற்காக நிபந்தனை கொடுத்தால் என்ன செய்வது. அதனால் இளைஞராக விஜய் ஒரு முயற்சி எடுக்கிறார் அவரை வரவேற்பது தானே எல்லாருடைய மரபு'' என்றார்.

சார்ந்த செய்திகள்