Skip to main content

பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி யோசிக்கப்படும்: தினகரன் பேட்டி

Published on 09/09/2017 | Edited on 09/09/2017
பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி யோசிக்கப்படும்:
 தினகரன் பேட்டி

மதுரை விமான நிலையத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,   நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையற்றது. நீட் தேர்வை எதிர்த்து நாளை போராட்டம் நடத்த இருந்தோம். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகலை இன்று படித்து பார்த்தேன். அதில் போரட்டத்திற்கு தடை விதித்துள்ளது. பொதுக் கூட்டம் நடத்த கூடாது என்று குறிப்பிடவில்லை. ஆதனால் பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி யோசிக்கப்படும்.  நீட் தேர்வு கொண்டு வந்தது மத்தியஅரசு.  தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையற்றது. வரும் காலத்தில் நீட் தேர்வு நிரந்தரமாக நிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் . 

  எடபாடி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. அதனால் தான் கவனரை சந்தித்தேன். எங்களிடம் 21 எம்ஏக்கள் உள்ளனர. பெரும் பன்மையை இழந்த எடப்பாடி அரசு நாற்காலியை விட்டு இறங்க மாட்டேன் என்றார் . எடப்பாடி முதல்வர் ஆவதற்கு அப்போது பெரும்பான்மை இருந்தது.          ஆனால் தற்பொழுது பொரும்பான்மையை இழந்து விட்டது.  எங்களது 21 எம்எல்ஏக்கள்  மைசூர் போன்ற விடுதிகளில் தங்க வைத்துள்ளோம்.  திருமங்கலத்தில் வரவேற்பு எவ்வாறு இருந்தது என்று நீங்கள் பார்த்திருந்திருப்பீர்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் அவர் கேட்டார் . உதயகுமார் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்ப வில்லை அவர் எப்படி  இருந்தார் இன்று எவ்வாறு உள்ளார். இதற்கு யார் காரணம் என்று உலகத்திற்கு தெரியும் என  கூறினார்.

- முகில்

சார்ந்த செய்திகள்