Skip to main content

50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட முக்கிய பிரமுகர். கடத்தியது எதற்காக என தீவிரம் காட்டும் போலீஸ்...  

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

வேலூர் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படும் ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள். இவர்  ரியல் எஸ்டேட் அதிபராக இருக்கிறார். நவம்பர் 6ந்தேதி காலை வீட்டில் இருந்து நடைபயிற்சிக்காக சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
 

yelagiri issue


அவரது மனைவி சாந்தி கணவர் திரும்பி இன்னும் வரவில்லையே என கவலையோடு இருந்துள்ளார். அப்போது அருள் தனது மகன் ராபின்சனுக்கு போன் செய்து தன்னை சிலர் கடத்தி சென்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் 10 லட்சம் பணம் கேட்கிறார்கள். வீட்டில் இருந்து 10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஆந்திரா மாநிலம் குப்பம் நகருக்கு வரச்சொல்லியுள்ளார்.

தனது தாய் சாந்தியிடம் இந்த தகவலை சொல்ல, அவர் அதிர்ச்சியாகி அழுதவர், தன் மகனிடம் பத்து லட்சத்தை ஒரு ட்ராவல் பேக்கில் போட்டு தந்து அனுப்பியுள்ளார். பணத்தை எடுத்துக்கொண்டு ராபின் கிளம்பி சென்றுக்கொண்டுயிருந்தபோது, கடத்தல் கும்பலை சேர்ந்தவன் "அருள் நம்பரில் இருந்தே ராபின்க்கு போன் செய்து 50 லட்சத்தை கொடுத்தால் தான் விடுவோம்" எனச்சொல்லி மிரட்டியுள்ளான்.

இதில் அதிர்ச்சியான ராபின், தனது தாய்க்கு போன் செய்து தகவலை சொல்ல, வீட்டில் அழுதுக்கொண்டுயிருந்த சாந்திக்கு இது பயத்தை ஏற்படுத்தி அழுதுள்ளார். இந்த தகவல் ஊரில் பரவ, முக்கியஸ்தர்களுடன் சென்று ஏலகிரி காவல் நிலையத்தில், தனது கணவர் கடத்தப்பட்டதையும், பணம் கேட்டது, தந்து அனுப்பியது பற்றி புகார் எழுதி தந்துள்ளார்.

திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேல், ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அருள் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, ஆந்திரா மாநிலம் குப்பத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. ராபினிடம் பணம் தந்து அனுப்பி அவரை, டி.எஸ்.பி தங்கவேல் தலைமையிலான தனிப்படை பாலோ செய்து சென்றுள்ளது. குப்பத்தில் நவம்பர் 6ந்தேதி இரவு பணம் தரும்போது, பின்னால்  சென்ற போலீஸ் டீம் மடக்கி பிடித்தது. பின்பு
அருள் மீட்கப்பட்டுள்ளார். கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

எதற்காக கடத்தினார்கள் ? ரியல் எஸ்டேட் தொழில் பிரச்சனையா அல்லது வேறு ஏதாவது தொழில் பிரச்சனையா என விசாரணை நடத்தி வருகின்றனர் போலலீஸார்.


ஏலகிரி மலையில் தமிழகத்தின் பிரபல அரசியல் முக்கியஸ்தர்கள் பலரும் மறைமுகமாக பினாமி பெயரில் கெஸ்ட் ஹவுஸ் கட்டி வைத்துள்ளனர். இதனால் இடங்களின் விலை தாறுமாறாக உள்ளது. அதோடு, மலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் பலர் இடம் வாங்கியவர்களை ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதேபோல் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தின் பல கட்டப்பஞ்சாயத்துகள் மலையில் தான் நடக்கின்றன. மலைப்பகுதியை சேர்ந்த மாலைவாசிகள் பலர் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டவும் செல்கிறார்கள். ஆட்களை அனுப்பிவைக்கும் ஏஜென்ட்களும் மலையில் உள்ளார்கள்.

இப்படிப்பட்ட மலையில் கடத்தல் நடந்துயிருக்கிறது என்றால் அது நிச்சயம் ரியல் எஸ்டேட் தொழிலுக்கானது மட்டுமானதாக இருக்காது என முடிவு செய்து போலீஸார் சிக்கியவர்கள், கடத்தப்பட்டவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்