வன்னியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் இராம நாகரத்தினம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது.
வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டை இன்னும் ராமதாஸ் அதிமுக அரசிடம் இருந்து பெற்று தரவில்லை, ஆனால் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக 20% இட ஒதுக்கீட்டை வழங்குவோம் என உறுதி அளித்துள்ளார். எனவே இந்த தேர்தலில் திமுகவுக்கு எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம்.
வன்னியர்களை வைத்து ராமதாஸ் அரசியல் வியாபாரம் செய்து கொண்டே இருக்கிறார். ராமதாஸ் தன்னுடைய மகன் அன்புமணிக்காக அதிமுகவிடம் இருந்து எம்.பி பதவியை பெற்றார். இப்போது பிரதமரிடம் நேரில் சென்று மத்திய அமைச்சர் பதவிக்காக சந்தித்துள்ளார்.
இந்த தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவுக்கு 28 வன்னியர் அமைப்புகள் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். வன்னியர்களுக்காக ராமதாஸ் எதுவும் செய்யவில்லை, ஆரம்பத்தில் காலத்தில் சொந்தமாக வீடு கூட வைத்து இல்லாமல் இருந்த ராமதாஸ் இப்போது இவ்வளவு கோடி கோடியாக சொத்து வைத்து இருக்கிறார் அது எல்லாம் எப்படி வந்தது.
அதேபோல வடதமிழகத்தில் எப்போதும் பதட்டமான சூழ்நிலைக்கு காரணமே ராம்தாஸ்தான் அங்குள்ள இளைஞர்களை தூண்டிவிட்டு இதுபோன்ற அரசியல் ஆதாயம் பெற்றுக்கொள்கிறார். காடுவெட்டி குரு செய்த அத்தனை பேச்சுக்கும், பிரச்சனைக்கும் ராம்தாஸ் தூண்டுதலே காரணம் என்றார் .